அப்படி ஒரு யோசனையோ, தீர்மானமோ இல்லை..! மக்கள் பீதியடைய தேவையில்லை, இராணுவ தளபதி மக்களுக்கு அறிவுறுத்தல்..
கொழும்பு நகரை வார இறுதியில் முடக்கும் எண்ணமோ, ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் எண்ணமோ இல்லை. என இராணுவ தளபதியும், கொரோனா எதிர்ப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார்.
அடையாளம் காணப்பட்டபகுதிகளை விட ஏனைய பகுதிகளுக்கு ஆபத்தில்லை என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக வாரஇறுதியில் கொழும்பு நகரை முடக்கும் எண்ணமோ அல்லது ஊரடங்கை பிறப்பிக்கும் திட்டமோ இதுவரையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலோ அல்லது வேறு பகுதிகளிலோ பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஏற்பாட்டால் மாத்திரமே ஊரடங்கினை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகள் தொடர்ந்தும் நிலைமைய உன்னிபாக அவதானித்து வருகின்றனர்.
என தெரிவித்துள்ள அவர் பொதுமக்களை பதட்டமடையவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரிக்கையை தளரவிடவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.