பாரிய அசம்பாவிதத்தை தடுத்துவிட்டோம்..! உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும், மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது..

ஆசிரியர் - Editor I
பாரிய அசம்பாவிதத்தை தடுத்துவிட்டோம்..! உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும், மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது..

யாழ்.பல்கலைகழகத்தில் 2ம் வருட மாணவர்களுக்கும், 3ம் வருட மாணவர்களுக்கும் இடையில் நடக்கவிருந்த பாரிய அசம்பாவிதத்தை பல்கலைகழக நிர்வாகம் தடுத்து நிறுத்தியிருக்கின்றது. 

மிக மூர்க்கத்தனமாக நின்றுகொண்டிருந்த 3ம் வருட மாணவர்களிடமிருந்து பாதுகாத்து 2ம் வருட மாணவர்களை வெளியேற்றுவதற்காக பலத்தை பிரயோகிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 

இரு தரப்பினருக்குமிடையில் விலக்கு தீர்க்கும்போது நக கீறல்கள் வருவது சகஜம். அதுவொரு பாரதுாரமான விடயமல்ல. என யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராசா கூறியுள்ளார். 

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இன்று மாணவர்களுக்கிடையில் உருவான தர்க்கம் பின்னர் நிர்வாகத்துடனான தர்க்கமாக மாறியிருந்தது. 

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் கருத்து தொிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடக்கும். மாணவர்களை இணைத்துக் கொண்டு கல்வி செயற்பாடுகள் சுமுகமாக தொடர்ந்து நடக்கும். 

நாங்கள் பாரிய அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம் என்றார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் நாளை மாலை 3 மணியளவில் பல்கலைகழக நிர்வாக உத்தியோகஸ்த்தர்கள் தவிர்ந்த பேரவை உறுப்பினர்கள் மூலம் 

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். என துணைவேந்தர் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு