SuperTopAds

ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய 500 பேர்வரை தலைமறைவு..! சுமார் 8 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படலாம், தேசிய அரச தாதியர் சங்கம் கருத்து..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கும் என தேசிய அரச தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சமன் ரத்னபிரிய சுட்டிக்காட்டியுள்ளார். 

இன்று பிற்பகலில் நடந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

மினுவங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த மேலும் 2000 ஊழியர்களுக்கும் அதேபோல அவர்கள் ஊடாக நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 6000 பேருக்கும் 

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது. இதுதவிர, குறித்த ஆடைத் தொழிற்சாலையிலிருந்த 500 பேர் வரையானவர்கள் தற்போது மாயமாகியுள்ளனர். 

அவர்களுக்கும் தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது எனத் தெரிவித்தார்.