கொழும்பில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!
கொழும்பு - இராஜகிரிய பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ராஜகிரிய வெலிக்கடவத்தை பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மாநகரசபை உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 27 தொழிலாளர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்
மாநகரசபையின் கூட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.