SuperTopAds

தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க களமிறங்கியது இராணுவம்..! வீட்டுக்கு வீடு தேடுதல்..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்று பரவிய மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பலர் அரசாங்கம் அறிவித்ததற்கமைய தங்களை அடையாளப்படுத்த தவறியிருக்கும் நிலையில், அவர்களை கண்டறிவதற்கான பணியில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். 

தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் சில ஊழியர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தம்மை அடையாளப்படுத்தத் தவறிவிட்டனர்.

இதன் விளைவாக, இந்த ஊழியர்களைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டுக்கு வீடு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுக்கான மூலத்தைக் கண்டறிய, சுகாதாரத் தரப்பினரும், பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், 

சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று சம்பவத்தைத் தொடர்ந்து, அதிகளவான தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து தொழிற்சாலைகளிலும் எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகளை நடத்த 

அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.