தலைமறைவாகியிருக்கும் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களால் திணறும் அரசு..! தகவலறிந்தால் 011 3456548 எண்ணுக்கு தொியப்படுத்துமாறு கோரிக்கை..
பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய தம்மை அடையாளப்படுத்தாமல் தலைமறைவாகியிருக்கும் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் தொடர்பான தகவல்கள் இருப்பின் 011 3456548 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொியப்படுத்துங்கள்.
மேற்கண்டவாறு இராணுவ தளபதியும், கொரோனா எதிர்ப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது.
மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் நபர்களை முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய முன்னிலையாகாத நபர்கள் தொடர்பாக அறிந்தால் அவர்கள் தொடர்பாக தெரிவிக்க முடியும். இதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய 011 3456548 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு இந்த விடயம் தொடர்பாக அறிவிக்க முடியும் என அவர் அறிவித்துள்ளார்.கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் நேற்று மாலை 4 மணிக்கு முன்னர்
அருகில் உள்ள இடங்களுக்கு வருமாறும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.