SuperTopAds

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்..

ஆசிரியர் - Editor I

கொரொனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில், கொழும்பு டாம் வீதியில் உள்ள மகளிர் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெறும்போதே அவருக்கு தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண், சுவாசக் கோளாறால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. 

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மினுவாங்கொட தொற்றுப் பரவலுடன் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.