மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பலர் கொழும்பில் பதுங்கியுள்ளனர்..! அடுத்த 7 நாட்கள் தீர்மானம் மிக்கவை, மக்களின் ஒத்துழைப்பை கேட்கிறது அரசு..
இலங்கையில் பல பகுதியில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த 7 நாட்கள் தீர்மானம் மிக்கவை என இராணுவ தளபதியும் கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம், அநுராதபுரம், பதுளை, காலி, குருநாகல், மொனராகலை, புத்தளம் கேகாலை, களுத்துறை, கண்டி, மாத்தறை, பொலன்னறுவை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கடந்த 4 நாள்களில் கோவிட் -19 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய மினுவங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய பலர் கொழும்பில் ஒளிந்திருக்கின்றனர் சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 0113456548 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார்.