SuperTopAds

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் கடந்த 20ம் திகதி தொடக்கம் பல பணியாளர்கள் கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர்..!

ஆசிரியர் - Editor I
மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் கடந்த 20ம் திகதி தொடக்கம் பல பணியாளர்கள் கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர்..!

ஹம்பகா - மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே பலர் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டது உள்ளடங்கலாக நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது. 

மேற்கண்டவாறு தொற்றுநோயியல் மருத்துவ நிபுணர் சுடத் சமரவீர தொிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், நோய் தொற்றுவார இறுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் 20ம் திகதி முதல் பலர் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுளளார்.

குறிப்பிட்ட பெண்மணி மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே ஆடைதொழிற்சாலையில் பலர் சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதுவரை கண்டுபிடிக்கப்படாத நோயாளர்கள் அனைவரையும் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன 

என அவர் தெரிவித்துள்ளார்.