SuperTopAds

கொரோனா தடுப்பூசி எப்போது வரும்? -உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்-

ஆசிரியர் - Editor III
கொரோனா தடுப்பூசி எப்போது வரும்? -உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்-

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் 9 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ளது. 

தடுப்பூசி கண்டுபிடிக்கும் மும்முரமாக நடந்து வருகிறது. மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டங்களில் உள்ள தடுப்பூசிகள் எப்போது பொது பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பதே பல நாடுகளின் ஏக்கமாக உள்ளது. 

இந்த நிலையில், இந்நிலையில், கொரோனா தடுப்பூசி எப்போது என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி தயாரான உடன் அவை அனைவருக்கும் சமமான விகிதத்தில் விநியோகம் செய்ய  உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றார்.