கட்டுநாயக்க விமான நிலைய பணியாளராக 50 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது..!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பிரிவில் பணியாற்றும் சிலாபம் பகுதியை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்தில் அவருடன் நெருங்கி பழகிய நபர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
இதேபோல் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் சுகாதார பிரிவின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்றனர்.