யாழ்.மாவட்டத்தில் அபாய பகுதியான புங்குடுதீவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது..! 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அபாய பகுதியான புங்குடுதீவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது..! 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்..

யாழ்.புங்குடுதீவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து புங்குடுதீவில் 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தொிவித்திருக்கின்றார். 

மேலும் வேலணை பிரதேசத்தில் 57 பேரும், குடாரப்பில் 82 பேரும், எழுவை தீவில் 22 பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு பெண் நெடுந்தீவுக்கு சென்றுவந்துள்ள நிலையில், 

அவர் பயணித்தபோது அவருடன் சேர்ந்து பேருந்து மற்றும் படகில் பயணித் 88 பேரை அடையாளம் காணும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் புங்குடுதீவில் 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

மேலும் யாழ்.மாவட்டத்தில் அபாய பிரதேசமாக அடையாளப்படும் புங்குடுதீவு பிரதேசம் முற்றாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் யாழ்.மாவட்டம் அபாய பிரதேசமாக அறிவிக்கப்படாதபோதும் மிக சிக்கலானதொரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

எனவே மக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும். குறிப்பாக கரையோர பகுதி மக்கள் யாழ் சமூகத்தின் நன்மைக்காகவும் உங்கள் குடும்பத்தின் நன்மைக்காகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு