இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு அழுத்தம்..! தொற்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை முடக்குங்கள், சிவப்பு எச்சரிக்கை விடுங்கள்..
இலங்கையில் கொரோனா தொற்று பரவாமலிருக்க தொற்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்து முடக்குமாறு இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எழுத்துமூல கோரிக்கை முன்வைத்திருக்கின்றது.
கொரோனா தொற்று அச்சம் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான 10 யோசனைகளை அரசாங்கத்திடம் அந்த சங்கம் முன்வைத்திருக்கிறது.இதன்படி,கொரோனா வைரஸ் நோயாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகளை விரிவுபடுத்தல்,
சாதாரணமான பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ளும் வசதிகள், பாதுகாப்பு பிரிவினர், சுகாதாரத்துறையினருடனான பொறிமுறை, கொரோனா நோயாளர்கள் இருக்கும் பகுதிகளை சிவப்பு எச்சரிக்கையிடப்பட்டு அங்கிருந்து வெளியேறாதபடி
அப்படியான பிரதேசங்களை முடக்கம் செய்தல், கொரோனா ஒழிப்பில் ஈடுபடுவோரையும் அடிக்கடி பரிசோதனை செய்தல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நெறிமுறைகளை கட்டாயமாக்கல் உள்ளிட்ட யோசனைகள் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.