கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் குழுந்தை மூச்சுவிட சிரமப்படுகிறது..! ஆடை தொழிச்சாலைக்கு சீல், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை..
ஹம்பகா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு குளிரூட்டப்பட்ட கட்டடத்தில் 400 பேர் வரை சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் கொரோனா தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண்ணுடன் ஒன்றாக பயணித்த, 40 பேர்,
சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை பெண்ணின் கணவர், அவரின் பிள்ளைகள் நால்வர் மற்றும் பெண்ணின் தந்தை ஆகியோர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவரது ஒரு குழந்தை மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்று தமது நிறுவனத்திற்குள் பரவுவதை தடுப்பற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் கடமையாற்றிய Brandix ஆடைத்தொழிற்சாலை நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தனியார் கல்வி நிலையங்களும் நாளை (5) திங்கட்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (9) வரை
மூடப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.