2 மாதங்களின் பின் மீண்டும் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளி..! நடவடிக்கையில் இறங்கியது ஜனாதிபதி செயலணி..
இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக கொவிட் -19 தடுப்பு ஜனாதிபதி செயலணி அவசர அவசரமாக கூடியிருக்கின்றது.
ஹம்பகா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற திவுலபிடிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டதையடுத்து
சமூகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கொவிட் – 19 தடுப்பு ஜனாதிபதி செயலணி இன்று முற்பகல் அவசரமாகக் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான இந்தச் செயலணியில் சுகாதார அமைச்சர் உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர்.
அதனால் 2 மாதங்களின் பின்னர் நாட்டில் சமூகத்தில் தொற்று ஏற்படட முதலாவது நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது?
சமூகத்தில் ஏற்பட்டுள்ள தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவசரமாக எடுக்கவேண்டிய நடவடிக்கை எவை என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.