SuperTopAds

7 கிராமசேவகர் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல்வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்..! 39 வயதான பெண்ணுக்கு கொரோனா..

ஆசிரியர் - Editor I

ஹம்பகா - திவுல்பிட்டி பகுதியில் 39 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் திவுல்பிட்டி பகுதியில் 7 கிராம சேவகர் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலமையகம் தொிவித்துள்ளது. 

இதேவேளை கம்பஹாவின் சில பகுதிகளில் வசிப்போர் தமது நகர எல்லையை விட்டு வேறு நகருக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கம்பஹா- திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39வயதுடைய பெண்ணொருவருக்கு, 

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பெண், கொழும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

இந்த பெண் காய்ச்சல் அறிகுறிகளுடன், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நோய் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் வேளையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கம்பஹா வைத்தியசாலையில் பணிப்புரிந்த 15 ஊழியர்கள் மற்றும் குறித்த பெண் பணிபுரிந்து வந்துள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 40உறுப்பினர்கள் அவர்களது வீடுகளிலேயே தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது குறித்த பெண்ணுக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.