மரண அறிவித்தல்: திரு. குட்டித்தம்பி இராசநாயகம் (குரும்பசிட்டி)

யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி இராசநாயகம் (யா/மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலை ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் (28.09.2020) இன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குட்டிதம்பி தங்கம்மா தம்பதினரின் இளைய மகனும் காலஞ்சென்ற கிட்டினர் நல்லம்மா தம்பதியினரின் மருமகனும் புஸ்பராணி (ஒய்வுபெற்ற ஆசிரியர் யா/வயாவிளான் மத்திய கல்லூரி) அவர்களின் கணவனும் அம்பிகை, சுபேதா ஆகியோரின் தந்தையும், திலீப்குமார், டினோசன் அவர்களின் மாமனாரும் ரிதுஸ்காவின் பேரனுமாவார். குணநாயகம் காலஞ்சென்ற இராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரரருமாவார்.
அன்னாரது இறுதி கிரியை நாளை செவ்வாய்க்கிழமை 11.30 மணியளவில் நடைபெற்று தகனக்கிரிகைகாக குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்திற்க்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.