மாணவிகள் மீது துஸ்பிரயோகம்..! மேலதிக வகுப்பு ஆசிரியரை அடித்து நொருக்கிய பெற்றோர் மற்றும் பொதுமக்கள்..
மேலதிக வகுப்புக்கு சென்றிருந்த பாடசாலை மாணவிகள் 4 பேரை துஸ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் ஒருவரை சிறுமிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அடித்து முறித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹம்பாந்தோட்டை - வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. பெற்றோர் மற்றும் பொதுமக்களின் தாக்குதலை தொடர்ந்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு,
நீதிமன்றில் நிறுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக வகுப்பு சென்ற நிலையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர்,
அது தொடர்பில் தமது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர் குறித்த ஆசிரியரை கடுமையாக தாக்கியதுடன், அந்தப் பகுதியில் கட்டி வைத்துள்ளனர்.
சந்தேக நபரான ஆசிரியரின் கையடக்க தொலைபேசியில், துஷ்பிரயோகம் தொடர்பான காணொளிகள் சிலவற்றையும் பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.பெற்றோரினால் கடுமையாக தாக்கப்பட்ட ஆசிரியர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவிகள் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.