தடைகளைத் தாண்டி கோலாகலமாக நடந்தேறியது ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழா..! பெருமளவு பக்தர்கள் பங்கேற்பு..

ஆசிரியர் - Editor I
தடைகளைத் தாண்டி கோலாகலமாக நடந்தேறியது ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழா..! பெருமளவு பக்தர்கள் பங்கேற்பு..

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பொங்கல் விழாவில் வவுனியா மாவட்டத்தில் இருந்தும் வடக்கின் பல பகுதிகளில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

108 பானைகள் வைத்து கடந்த காலத்தை விடவும் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழாவாக இந்த ஆண்டு பொங்கல் விழா இடம்பெற்றது.

வெடுக்குநாறி மலைக்கு செல்லும் வழிகளில் பொலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சோதனையின் பின் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அதனைப் பொருட்படுத்தாது பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கோலாகலமாக நடத்தி இருந்தனர்.

வனவள திணைக்களத்தினர் தொல்லியல் திணைக்களத்தினர் போலீசார் என பல்வேறு தரப்பினர் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவிற்கு தடைகளை ஏற்படுத்த முயற்சித்த போதும் ஆலய நிர்வாகம் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இந்த ஆண்டு பொங்கல் விழாவை நடாத்தியுள்ளனர்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆலய பொங்கல் விழாவை கோலாகலமாக நடாத்திய ஊர்மக்கள் ஆலய நிர்வாகத்தினர் பாராட்டப்பட்டது பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு