மக்கள் நடமாட்டம் அதிகமான யாழ்.நகரில் பெருமாள் கோவில் அருகில் வாள்வெட்டு..! தனுரொக் என்ற ஆவா குழு ரவுடி மீதே வாள்வெட்டாம்..

ஆசிரியர் - Editor

யாழ்.நகரில் அதிக மக்கள் நடமாட்டமுள்ள பெருமாள் கோவில் வாசலில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப் பட்டிருக்கின்றது. இன்று நண்பகல் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கறுப்பு நிற கார் ஒன்றில் வந்த வாள்வெட்டு கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை இடித்து விழுத்தியுள்ளதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

எனினும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி அருகில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்குள் நுழைந்த நிலையில் அங்கும் துரத்தி சென்ற வாள்வெட்டு குழு

வாளால் வெட்டிவிட்டு வீடுகளுக்கால் நுழைந்து நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வாள்களை வீசிவிட்டு தப்பி ஒடியுள்ளது.

சம்பவத்தையடுத்து படையினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியுள்ளதுடன்,

மருத்துவர்களுக்கான இலட்சணை பொறிக்கப்பட்ட கறுப்புநிற கார் ஒன்றினையும், மோட்டார் சைக்கிள் மற்றும் இரு வாள்களை மீட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

Radio