பொலிஸ் சோதனைசாவடி மீது துப்பாக்கிச் சூடு!! -28 போலீசார் கொன்று குவிப்பு-
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக கத்தார் நாட்டில் தலீபான் தலைவர்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசு குழுவினருக்கும் இடையே பேச்சு வார்த்தை ஒரு வார காலத்துக்கு மேலாக நீடித்து வருகிறது.
இருப்பினும் அங்கு தலீபான்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான மோதல்களும் வலுத்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீசாரும், பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் இராணுவம் மற்றும் போலீஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் 25 தலீபான்கள் பலியாகினர்.
குறித்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலீபான்கள் தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது துப்பாக்கியால் சுட்டு கொடூரமான தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 போலீசார் கொன்று குவிக்கப்பட்டனர்.