கொரோனாவை திட்டமிட்டு பரப்பிய சீனா!! -ஜ.நா வில் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு-

ஆசிரியர் - Editor II
கொரோனாவை திட்டமிட்டு பரப்பிய சீனா!! -ஜ.நா வில் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு-

சீனாவே வேண்டுமென்றே திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். 

காணொலி காட்சி வழியாக நடந்த ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

சீனா, தனது நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கு தடைவிதித்து விட்டு, வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கி கொரோனாவை உலகிற்கு பரப்பி இலட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டதாகவும் சாடினார்.

உலக சுகாதார நிறுவனத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தவறான தகவல்களை சீனா வெளியிட்டதாகவும் அவர் கூறினார். 

மேலும் சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதாகவும், சீனாவின் இத்தகைய செயல்களுக்கு ஐநா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

Radio