நிர்வாண படங்கள், வீடியோக்களை அனுப்புமாறு பேஸ்புக், வட்ஸப் ஊடாக பகிடிவதை..! யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீட மாணவர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்...
யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்கலைகழக மாணவர்களாலேயே மேற்கொள்ளப்படும் பகிடிவதை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று நடந்தது. இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு கூறினார்,
இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தில் பயிலும் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் வட்ஸ்அப் மற்றும் பல சமூக வலைத்தளங்கள்,
செயலிகள் ஊடாக நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புமாறு புதிய மாணவர்களுக்கு அச்சறுத்தலும், பகிடிவதையும் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவ்வாறு காணொளிகளையும் புகைப்படங்களையும் அனுப்பத்தவறும் மாணவர்கள் பல்கலைக்கழத்திற்குள் நுழைவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் மாணவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும்
செய்திகள் வெளியாகியிருந்தன.இ ந்த விவகாரம் குறித்து இன்று கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அரசாங்கம் இந்த பகிடிவதை விவகாரம் குறித்து முழுமையான கவனம் செலுத்தியிருப்பதாகவும்,
விரைவு விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.