யாழ்ப்பாணத்தில் பழமையான கார்களின் அணிவகுப்பு!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் பழமையான கார்களின் அணிவகுப்பு!

யாழ்பாணத்தில் இன்று பழமையான கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்துச் சென்று மக்களின் கவனத்தை ஈர்த்தன. பழமைவாய்ந்த பதினெட்டு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளும் நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து பேரணியாக புறப்பட்டு, நேற்று மாலை யாழ். நகரை வந்தடைந்தன. இன்று காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு சென்று அங்கிருந்து நல்லூர் வீதி வழியாக மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்றன.

இன்று காலை வாகன பேரணி யாழ் கோட்டையை வந்தடைந்த போது வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றோசான் பெனாண்டோ பேரணியாக வந்த வாகனங்களினை பார்வையிட்டார். மிகவும் பழமை வாய்ந்த வாகன பேரணியை பெருமளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு