குணமடையும் 10 பேரில் ஒருவரை மீண்டும் தாக்கும் கொரோனா!! -ஆய்வில் திடுக்கிடும் தகவல்-
கொரோனாவில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடையும் 10 நோயாளிகள் ஒருவர் மீண்டும் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது என்று அமெரிக்க ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அவசர மருத்துவம் தொடர்பான பத்திரிகை நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் 10 நோயாளிகளில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அனுப்பப்பட்ட பின்னர் ஒரு வாரத்துக்குள் மீண்டும் வைத்தியசாலைக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளதாக தெரியவந்துள்ளது.
காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் வைத்தியசாலைக்கு வருவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை 1,400 நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.