SuperTopAds

12 வயதான மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்..! அதிபருக்கு 2 வருடங்கள் கடூழிய சிறை, 7 வருடங்களின் பின் நீதிமன்றம் தீர்ப்பு..

ஆசிரியர் - Editor I
12 வயதான மாணவன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்..! அதிபருக்கு 2 வருடங்கள் கடூழிய சிறை, 7 வருடங்களின் பின் நீதிமன்றம் தீர்ப்பு..

பாடசாலை சிறுவனை மூர்க்கத்தனமாக தாக்கிய பாடசாலை அதிபருக்கு 2 வருடங்கள் கடூழிய சிறை தண்டணை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2013 ஆம் ஆண்டில் 12 வயதான மாணவன் ஒருவனை கொடூரமாகத் தாக்கியமை தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, 

அதிகாரசபையின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதற்கமைய, கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான ஆசிரியரை கைதுசெய்து

 விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்னர் 5 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, 5,000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிட்டார். 

அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறைத்தண்டனை அனுப்பவிக்க உத்தரவிட்ட அதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 25 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக செலுத்தவும் உத்தரவிட்டார். 

அந்தத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிட்தாக தேசிய சிறுவர் அதிகாரசபையின் தலைவர், பேராசிரியர் முதிய விதானபதிரண தெரிவித்தார்.