SuperTopAds

கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு..! இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு..

ஆசிரியர் - Editor I
கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு..! இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு..

கொரோனா சந்தேகத்தில் சிலாபம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கொழும்பின் புறநகர் பகுதியான நுகேகொடையைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 02ஆம் திகதி டுபாயிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய இவர் 

சிலாபம் பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் அவருக்கு நேற்று இரவு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 

சிகிச்சைப் பெற்றுவந்தார். இதனிடையே அவர் இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார் என்று சிலாபம் வைத்தியசாலை தெரிவிக்கின்றது.

இவ்வாறு உயிரிழந்தவரது இரத்த மாதிரி மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கான விடயங்கள் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.