SuperTopAds

சுமார் 300ற்கும் மேற்பட்டோர் முன்னிலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இளம் பெண்..! வேடிக்கை பார்த்து, வீடியோ எடுத்தவர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

பாலத்திலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்வதை வேடிக்கை பார்த்ததுடன், அதனை வீடியோ பதிவு செய்த 15 சாரதிகள் நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

கடுஹஸ்தோட்ட பாலத்திலிருந்து குதித்து இளம் பெண்னொருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் கடந்த 11ம் திகதி இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்திற்கு காதல் முறிவே காரணம் என கூறப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த பெண் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்தபோது அந்த இடத்தில் 300 பேர்வரையில் கூடியிருந்து அந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பதை வேடிக்கை பார்த்திருக்கின்றனர். 

மேலும் பாலத்தின் ஊடாக பயணித்த வாகன சாரதிகள் பாலத்திலேயே வாகனத்தை நிறுத்தி போக்குவரத்து நொிசலை ஏற்படுத்தியதுடன், வீடியோ எடுத்திருக்கின்றனர்.