தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறக்கவில்லை..! அவர் ஒரு நோயாளி அதனாலேயே அவரை பிரபாகரன் தேர்வு செய்தார்.. பாதுகாப்பு செயலாளரின் கண்டுபிடிப்பு..

ஆசிரியர் - Editor I

உண்ணாவிரதப் போராட்டத்தால் திலீபன் உயிரிழக்கவில்லை. அவர் ஒரு நோயாளி என்பதாலேயே உண் ணாவிதரப் போராட்டத்துக்கு பிரபாகரனால் அனுப்பட்டிருந்தார். என பாதுகாப்பு அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் காமல் குணரட்ன தெரிவித்தார்.

கண்டி - போகம்பரை சிறைச்சாலைக்கு இன்று கண்காணிப்புப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த பாதுகாப்புச் செயலரிடம், பூஸா சிறைச்சாலையில் கைதிகள் சிலர் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக் கும்போதே இந்த விடயத்தையும் குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டிலுள்ள பயங்கர குற்றவாளிகளே பூசா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நியாயமானவை எனில் அவை நிறைவேற்றப்பட்டிருக்கும். அநீதியான கோரிக்கைகள் எனில் அவற்றை ஒருபோதும் நிறைவேற்றமுடியாது. 

கைதிகளை சந்திக்கவரும் சட்டத்தரணிகளை எவ்வித பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் உள்ளே விடுமாறு கோரியுள்ளனர். பூஸா சிறைச்சாலை என்பது உயர்பாதுகாப்பு வலய சிறைச்சாலையாகும். அங்கு எவர் சென்றாலும் உரிய பரிசோதனைகளின் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 

அதேவேளை, எமது நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாகும்வரையான உண்ணா விரதப்போராட்டங்கள் தொடர்பில் குறிப்பிடுவதாக இருந்தால், அத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டு திலிபன் என்பவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். அவரும் உண்ணா நோம்பால் உயிரிழக்கவில்லை, 

அவர் ஒரு நோயாளி. இதன்காரணமாகவே உண்ணா விரதப்போராட்டத்துக்கு செல்லுமாறு பிரபாகரன் குறிப் பிட்டிருந்தார். பட்டினி அதிகரிக்கும்போது உண்ணாவிரதப் போராட்டத்தை ஏதேனும்விதத்தில் கைவிட்டுவிடுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளில் 20 பேர்வரை 

தற்போது உணவு உண்ணுகின்றனர், ஏனையோரும் இன்னும் ஓரிரு நாட்களில் வழமைக்கு திரும்புவார்கள். எனவே, அது பெரிய பிரச்சினையாக அமையாது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு