SuperTopAds

வடகிழக்கு மாகாண மக்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் முதலீட்டு முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு..! கனடா முதலீட்டாளர்களுக்கு பிரதமர் உத்தரவாதம்..

ஆசிரியர் - Editor I

வடகிழக்கு மாகாணங்களில் தனியார் நிறுவனங்களை உருவாக்கி மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டங்களுக்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்திருக்கின்றார். 

கனடா தமிழ் முதலீட்டாளர்களை இன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார். இதன்போது வடகிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த இரண்டு முதலீட்டாளர்களும் 

வடகிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார். இச் சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டிருந்தார். இச்சந்திப்பின்போது பிரதமர் அவர்கள் தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் 

வடகிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்கு இருக்கக்கூடிய மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் 

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்தார்.