இறைச்சிக்காக மாடு வெட்டுவதை தடைசெய்யும் தீர்மானம் 1 மாதம் ஒத்திவைப்பு..! பூரணமான பிரேரணையை சமர்பிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ..
இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடைசெய்யும் ஆழுங்கட்சி கூட்டத்தின் தீர்மானத்தை அமைச்சரவை 1 மாதகாலத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரான ஹெகலிய ரம்புக்வெல கூறியிருக்கின்றார்.
அரச தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றிருந்தது. இதன்போதே ஹெகலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
குறித்த தடை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காகவே இந்த ஒத்திவைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்யும் வகையில் ஆழுங்கட்சியல் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளார்.
அதனை ஆழுங்கட்சி நாடாளுமன்ற குழு அங்கீகரித்திருக்கின்றது. மேலும் கட்சி கூட்டத்திலும் பிரதமர் இந்த பிரேரணையை முன்மொழிந்து பலருடைய பாராட்டை பெற்றுள்ளார். எனினும் பிரதமர் உத்தியோகபூர்வமான திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை.
ஆனாலும் விரைவில் அதனை சமர்பிக்கவுள்ளார். அது எப்போது? எப்படி? என்பது பிரதமருக்கு மட்டுமே தொியும் என ஹெகலிய ரம்புக்வெல கூறியிருக்கின்றார்.