மரண தண்டணை கைதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு..! நாடாளுமன்றில் கூச்சலுக்கு நடுவில்..
ஒருவரை சுட்டு கொன்றதற்காக மரண தண்டணை விதிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறேம்லால் ஜயசேகர இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.
மரண தண்டனை கைதியான இவர் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்று சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் செல்ல இடைக்கால அனுமதி வழங்கி
மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.