SuperTopAds

எல்லை தாண்டும் இந்திய இராணுவம்!! -துப்பாக்கிச்சூடம் நடத்துகின்றது: சீனா குற்றச்சாட்டு-

ஆசிரியர் - Editor III
எல்லை தாண்டும் இந்திய இராணுவம்!! -துப்பாக்கிச்சூடம் நடத்துகின்றது: சீனா குற்றச்சாட்டு-

இந்திய இராணுவம் தனது நாட்டின் எல்லையை தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா அரசாங்கம் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே அண்மைக்காலமாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய இராணுவம் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. 

சீன இராணுவ செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறுகையில்:- எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை சட்டவிரோதமாக கடந்த இந்திய இராணுவம், பாங்கோங் ஏரி மற்றும் சென்போ மலைப்பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. 

சீன இராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்திய இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.  எனவே நிலமையை கட்டுக்க்குள் கொண்டு வர  நாங்கள் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.