உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி!! -விநியோகிக்க தயாராகும் யுனிசெப்-
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் விநியோகம் செய்யும் பணியை யுனிசெப் அமைப்பு முன்னின்று மேற்கொள்ள இருக்கிறது.
தற்போது கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25 ற்க்கு மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
அந்த நாடுகளிடம் இருந்து கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை பெற்று 170 ற்க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகம் செய்யும் பணியை யுனிசெப் முன்னின்று மேற்கொள்ள இருப்பதாக அதன் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா போரே தெரிவித்து உள்ளார்.