பாடசாலை மாணவர்களுக்கு முககவசம் கட்டாயம்..! அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம்..
நாளை தொடக்கம் இலங்கையில் சகல பாடசாலைகளும் வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் அனைவரும் முககவசம் அணிவரை கட்டாயம் ஆக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
கோவிட்- 19 தொற்றுநோய் இன்னும் பல நாடுகளில் பரவலாக இருப்பதால், இந்த நோய் நம் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கருத முடியாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி ஹரிதா அலுத்ஜ் கூறுகிறார்.
பாடசாலைகளின் கல்வியின் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும் நிலையில் சமூக இடைவெளி ஒரு மீற்றருக்கு இடையில் உள்ள தூரம் குறைக்கப்பட வேண்டும் என்பதால் முகக் கவசம் அணிவது மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.