ஜப்பானில் 134 மைல் வேகத்தில் வீசவுள்ள சூறாவளி!! -70 இலட்சம் பேருக்கு எச்சரிக்கை-
ஜப்பானை நாட்டிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ‘ஹாசென்‘ சூறாவளி இன்று அந்நாட்டில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிiயில் தெற்கு ஜப்பானில் 9 மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 70 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
குறித்த சூறாவளி மணிக்கு 134 மைல் வேகத்தில் காற்று வீசும் எனவும் மேலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது பெரும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் கொந்தழிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றனர்.