SuperTopAds

பொது இடங்களில் அநாகரிகம்..! 100 காதல் ஜோடிகள் கைது, பொதுமக்களின் முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
பொது இடங்களில் அநாகரிகம்..! 100 காதல் ஜோடிகள் கைது, பொதுமக்களின் முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சிக்கினர்..

அனுராதபுரம் மாவட்டத்தில் புனித பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இடங்களில் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட சுமார் 100 காதல் ஜோடிகளை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். 

அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக பொதுமக்களினால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைவாக ஜோடிகளை இவ்வாறு செய்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், கல்வி நிலையங்களுக்கு செல்வதாக வீடுகளில் கூறிவிட்டு வந்து, இங்குள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் ஆகிய பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.