SuperTopAds

சமூக வலைத்தளம் ஊடாக பணம் பறிக்கும் மோசடி கும்பல்..! மக்கள் அவதானமாக இருப்பது நல்லது, அரசு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
சமூக வலைத்தளம் ஊடாக பணம் பறிக்கும் மோசடி கும்பல்..! மக்கள் அவதானமாக இருப்பது நல்லது, அரசு அறிவிப்பு..

சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பாக கணனி, இணைய குற்றப்பிரிவு பொலிஸார் ஆரம்பித்திருக்கும் நிலையில் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. தாய்லாந்தில் தொழில் வாய்ப்புகள் உள்ளதாக விளம்பரம் பதிவிட்டு 

நிதி மோசடி மேற்கொள்ளும் குழு தொடர்பில் பாங்ஹொக்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக மோட்டார் வாகன சீட்டிழுப்பில் மோட்டார் வாகனம் ஒன்று கிடைத்துள்ளதாக 

பணம் மோசடி செய்யப்படுவதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் ஊடாக அடையாளம் காணப்படும் நபர்களினால் அவ்வாறான பரிசுகள் கிடைத்துள்ளதாகவும் 

அதனை சுங்க பிரிவில் விடுவிப்பதற்கு பணம் வைப்பிடுமாறும், திருமண யோசனைகள் முன் வைத்து நிதி மோசடிகள் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு குழுவினர் இணைந்து மேற்கொள்ளும் மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.