மோடிக்கு கொலை மிரட்டல்!! -வெளிநாட்டில் இருந்து வந்த இமெயில்-

ஆசிரியர் - Editor III
மோடிக்கு கொலை மிரட்டல்!! -வெளிநாட்டில் இருந்து வந்த இமெயில்-

இந்தியாவின் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இமெயில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த இமெயில் வெளிநாட்டிலிருந்து இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இமெயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 8 ஆம் திகதி, என்.ஐ.ஏ., இமெயில் முகவரிக்கு, பிரதமர் மோடி கொலை செய்யப்பட வேண்டும் என்ற வாசகங்களுடன் மெயில் ஒன்று வந்தது. 

இதனையடுத்து, பிரதமரின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என எஸ்.பி.ஜி., பாதுகாப்பு படைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இமெயில் குறித்து விசாரிக்க 'ரா', உளவுத்துறை உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், வெளிநாட்டிலிருந்து இந்த மிரட்டல் மெயில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.