SuperTopAds

தேர்தலுக்காக காத்திருக்கும் கொரோனா தடுப்பூசி!! -மக்களின் உயிரை பணயம் வைக்கும் டிரம்-

ஆசிரியர் - Editor III
தேர்தலுக்காக காத்திருக்கும் கொரோனா தடுப்பூசி!! -மக்களின் உயிரை பணயம் வைக்கும் டிரம்-

அமெரிக்காவில் நவம்பர் முதலாம் திகதிக்குள் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி பொது மக்களுக்கு செலுத்த அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 இலட்சத்தை தாண்டிவிட்டது. 

அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப், தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என்றும், இது தனது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்புகிறார். 

இதனால் தேர்தலுக்கு இரு நாட்கள் முன் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை அறிமுகம் செய்து டிரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்த, மக்களின் உயிரை பணயமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.