2 லட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் எண்ணையுடன் எரிந்து கொண்டிருக்கும் கப்பல்..! 23 பேரை மீட்டது இலங்கை கடற்படை, மீட்பு பணி தொடர்கிறது..
இலங்கை கடல் எல்லைக்குள் தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கும் பனாமா நாட்டுக்கு சொந்தமான எண்ணை கப்பலில் இருந்து சுமார் 23 பேர் இலங்கை கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒருவர் காயமடைந்திருக்கின்றார். மீட்புப் பணிகளுக்காக விமானப் படையின் ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 270000 மெற்றிக் டொன் எண்ணெய் சுமந்து அம்பாறை சங்கமன் கந்த கடற்பகுதியிலிருந்து சுமார் 38 மைல் தூரத்தில் இந்தியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த
எம்.டி.நியூ டயமன் என்கிற கப்பலில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது.