SuperTopAds

கீழே விழுந்த பெண்ணை குத்திய இருப்பு கம்பி!! -3 மணிநேர அறுவை சிகிச்சையின் பின் உயிர்பிழைத்தார்-

ஆசிரியர் - Editor III
கீழே விழுந்த பெண்ணை குத்திய இருப்பு கம்பி!! -3 மணிநேர அறுவை சிகிச்சையின் பின் உயிர்பிழைத்தார்-

கட்டுமானப்பணியின்போது 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பெண் ஒருவருக்கு குத்திய இரும்பு கம்பி அவருடைய உடலை துழைத்து சென்றுள்ளது, 

உடனடியாக இருப்பு கம்பியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

சீனா நாட்டின் ஒரு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப்பணியின்போது பெண் ஒருவர் 10 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார். 

விழுந்த குறித்த பெண்ணின் உடலுக்குள் கம்பி ஒன்று நுழைந்தது. கம்பியில் சிக்கி தொங்கிக்கொண்டிருந்த சியாங் என்ற அந்த பெண்ணை அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கம்பியை அறுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

அந்த கம்பி சியாங்கின் பின்புறம் வழியாக நுழைந்து, அவரது தோள் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அவரை ஸ்கேன் செய்த வைத்தியர்கள், அந்த கம்பி உடலின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்திருந்தாலும், அவரது முக்கிய உள்ளுறுப்புகளோ, முக்கிய இரத்தக்குழாய்களோ பாதிக்கப்படாமலிருப்பதைக் கண்டு வியந்தார்கள்.

உடனடியாக அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள் அந்த கம்பியை அகற்றுவதற்கு 3 மணி நேரம் போராட்டத்தின் பின் உடலில் இருந்த கம்பியை அகற்றியுள்ளனர். 

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் சியாங்கின் நிலைமை சீராக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.