ஆட்சியைப் பிடிக்க ஆதரவு கோருவதில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முடிவு

ஆசிரியர் - Admin
ஆட்சியைப் பிடிக்க ஆதரவு கோருவதில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முடிவு

வடக்கில் எந்த கட்சியின் ஆதரவுடனும் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி முடிவெடுத்துள்ளது. 

நல்லூர் பிரதேசசபையில் ஐங்கரநேசன் தலைமையிலான சுயேச்சைக்குழுவின் ஆதரவை மட்டும் பெறுவது, என்றும் வேறு யாருடைய ஆதரவையும் பெறுவதில்லையெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு