தமிழ் மக்­க­ளுக்கு மன்­னிக்க முடி­யாத கொடூ­ரங்கள் நிகழ்த்­தப்­பட்­டன: குகதாஸ்

ஆசிரியர் - Admin
தமிழ் மக்­க­ளுக்கு மன்­னிக்க முடி­யாத கொடூ­ரங்கள் நிகழ்த்­தப்­பட்­டன: குகதாஸ்

எமக்­கான நீதி பொறுப்­புக்­கூ­றலை கடந்த கால அர­சாங்­கமும் படை­யி­னரும் கூறித் தான் ஆக வேண்டும். எங்கள் மக்கள் மீது நடத்­தப்­பட்ட இந்த அநி­யா­யங்­களை ஒரு காலமும் மறக்­கப்­போ­வ­தில்லை.

மன்னிக்க முடி­யாத பல கொடூ­ரங்கள் எமக்கு நிகழ்த்­தப்­பட்­டன. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் தற்­போ­தைய சூழல் எமக்கு சாத­க­மாக இருப்­ப­தனால் இதனைப் பயன்­படுத்தி எமக்­கான பொறுப்­புக்­கூறல், நீதி விசாரணை கிடைப்­ப­தற்கு முத­ல­மைச்சர், தமிழ்த் தலை­மைகள் ஒன்­று­பட்டு இதற்­கான நட­வ­டிக்­கையை எடுக்க வேண்டும் என்று வட­மா­காண சபையின் புதிய உறுப்­பினர் சபா­ரட்ணம் குகதாஸ் தெரி­வித்தார்.

புதிய உறுப்­பி­ன­ராக சத்­தியப் பிர­மாணம் செய்து கன்னியுரையை நிகழ்த் தும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு