சுற்றுலா சென்ற இடத்தில் நிறை மதுபோதையில் கிராமவாசிகள் மீது தாக்குதல்..! மடக்கி பிடித்து முழங்காலில் இருத்தி அடித்து நொருக்கிய கிராம மக்கள், 6 பேர் காயம்..
சுற்றுலா சென்ற இடத்தில் நிறை மதுபோதையில் கிராம வாசிகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்தவர்களை மடக்கி பிடித்து முழங்காலில் உட்காரவைத்து கிராம மங்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் வெல்லவாய - ஹண்டபலனல என்ற இடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுற்றுலா சென்றிருந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுற்றுலா சென்ற இளைஞர் குழு ஒன்று ஹண்டபனகல பகுதியில் தரித்து, மதுபான விருந்து வைத்துள்ளனர். இதன்போது இரண்டு கிராமவாசிகளைத் தாக்கி அவர்களின் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஹடபனகல பகுதி கிராம மக்கள்
சுற்றுலாப் பயணிகளை சுற்றிவளைத்து தாக்கி, முழங்காலில் உட்கார வைத்துள்ளனர். இரண்டு கிராமவாசிகளையும் தாக்கிய சில இளைஞர்களை மட்டும் அடித்து நொருக்கியுள்ளனர், ஏனையவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.
காயமடைந்த 6 பேரும் மொனராகல பொது வைத்தியசாலை மற்றும் ஹடபனகல பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெல்லவாய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.