SuperTopAds

தனிமைப்படுத்தலில் இருந்து வயோதிப பெண் தப்பி ஓட்டம்..! கொரோனா அபாயம் இல்லை என மருத்துவர்கள் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
தனிமைப்படுத்தலில் இருந்து வயோதிப பெண் தப்பி ஓட்டம்..! கொரோனா அபாயம் இல்லை என மருத்துவர்கள் விளக்கம்..

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் தப்பி ஓடியுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தொியவருகின்றது. 

அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு திரும்பிய ஏ.ஏக்க நாயக்க என்ற 80 வயதான பெண்னொருவர் அளுத்தகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 

மன அழுத்தத்திற்குள்ளான நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

நேற்று காலை 7.30 மணியளவில் தாதி மருந்து வழங்குவதற்கு அவரை தேடும் போது அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் கொரோனா உறுதியாகவில்லை எனவும் கொரோனா என சந்தேகிக்கும் நிலையும் உறுதியாகவில்லை என வைத்தியசாலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.