SuperTopAds

தகப்பன், தாய், மகள் போதைப் பொருள் வியாபார குடும்பம் கைது..! போதைப் பொருளுக்கு அடகுவைத்த தொலைபேசிகள், அடையாள அட்டைகள், சாரதி அனுமதி பத்திரங்களும் மீட்பு..

ஆசிரியர் - Editor I

நீண்ட நாட்களாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த குடும்பம் ஒன்று பொலிஸாரின் முற்றுகைக்குள் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளது. 

இதற்கமைய ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 11 கிராம் 720 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதோடு, போதை பொருளுக்காக அடகு வைக்கப்பட்ட 14 கையடக்க தொலைபேசிகள், 

09 தேசிய அடையாள அட்டைகள், 03 சாரதி அனுமதி பத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், குறித்த குடும்பத்தில் மருமகன்கள் இருவர் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்காக 

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னர் பல தடவைகள் குறித்த குடும்பத்தினரை கைது செய்ய முயற்சித்த வேளையில் 

காவல் துறையினருக்கு எதிராக மனித உரிமைகள் வழக்கு தொடர முயற்சித்தனர் எனவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.