பெண்ணிடம் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் அதிகாரி விடுதியில் சிக்கினார்..! லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி..
பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி ஒருவர் விடுதியில் வைத்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
ஹொரணை பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிவரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து இச்சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.