இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வசதி..! உங்கள் தொலைபேசி இலக்கத்தை மாற்றும் அவசியம் இல்லை..
இலங்கை மக்கள் தம் தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் விரும்பிய தொலைத் தொடர்பு சேவை வழங்குனரை தேர்வு செய்வதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. வாடிக்கையாளரின் தேவையின் அடிப்படையில் தொலைபேசியில் பயன்படுத்தும்
சிம் அட்டையை மாற்றம் செய்யாது, தொலைத்தொடர்பு சேவை வழங்குனரை மாற்றம் செய்யும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் தொலைபேசி நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இந்திரஜித் ஹந்தபான்கொட குறிப்பிட்டுள்ளார்.