இலங்கையில் கொரோனாவை விட ஆபத்தான நோய்..! 37 பேர் இதுவரை மரணம், தொற்றுநோய் பிரிவு எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I

எலிக்காய்ச்சல் இலங்கையில் தீவிரமாக பரவிக் கொண்டிருப்பதாக இலங்கை தொற்று நோய் பிரிவு எச்சரித்துள்ளது. 

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 4,554 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 

தொற்று நோய்ப்பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மேலும், அதிகமாக எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் பதிவாகியுள்ளது. 

அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் மட்டுமே எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இதனால் எலிக்காய்ச்சல் தொடர்பில் அனைவரையும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு